Sunday, September 9, 2012

கத்தரிக்காய் (ரோஸ்ட்) கறி

கத்தரிக்காய் (ரோஸ்ட்) கறி


நல்ல சின்ன சின்ன சேப்பு  கத்தரிக்காய்
மார்கட்ல விக்கும் வாங்குங்க



அத குட்டி குட்டியா நீளவாக்கில் நறுக்குங்கள்
(நறுக்கும் போது  பாத்திரத்தில்  தண்ணி வச்சுகிட்டு
அதுல போடுங்க , கத்தரிக்காய் சீக்கிரம் கருத்து விடும்)




அடுப்பில் வாணலியில் சிறிதளவு எண்ணை ,
கடுகு உளுத்தம்பருப்பு தாளிப்பு , கருவேப்பிலை கொஞ்சம்
போடுங்க  இப்ப நறுக்கி வச்ச கத்தரிக்காயை போட்டு
உப்பு சேர்த்து , கொஞ்சம் காரப்பொடி போடுங்க
நல்லா வதக்குங்க ,

அடுப்ப சிம்ல வச்சு, இன்னும் கொஞ்சம் என்னை விட்டு
ஹம்  வதக்ட்டும், காய்ல  இருக்கற  தண்ணி வத்தினதும்
கத்தரிக்கா ரோஸ்ட் ஆகிவிடும் .

இறக்கிடுங்க



கொஞ்சம் சாதம் போடு , காய சேர்த்து , ரெண்டு பிடி
வாயில் போடுங்க , வாழ்க்கையை அனுபவியுங்க


கத்தரிக்கா , கத்தரிக்கா , குண்டு  கத்தரிக்கா
உண்டு களிப்போம் வாங்க , உள்ளம் மகிழ்வோம்


No comments:

Post a Comment