Wednesday, September 12, 2012

உள்ளே இருந்தாலும் உள்ளம் அறியாது!


                                          வாரம் ஒருபாடல்
               





உள்ளே இருந்தாலும் உள்ளம் அறியாது!

இறைவன் உயிரோடு கலந்து இருந்தும், அதாவது நம்முள்ளே இருந்தாலும் உள்ளம் அதை அறியாது என்று மனிதனின் உள்ளத்து இயல்பை தமது திருமந்திரத்தில் திருமூலர் காட்டுகிறார்.



""உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை
 உள்ளம்விட் டோடி நீங்கா ஒருவனை
 உள்ளமும் தானும் உடனே இருக்கினும்
 உள்ளம் அவனை உருவறி யாதே''



-உயிருக்கு உயிராய் உள்ளத்துள் ஒளிரும் இறைவனை, உள்ளத்தை விட்டு ஓர் அடிகூட விட்டு நீங்காத ஒப்பற்ற இறைவனை, உள்ளத்துள் அவனும் உயிரும் உடனாய் இருப்பினும், உள்ளமானது அந்த வடிவை அறியவில்லையே என தன் ஏக்கத்தை வெளிப்படுத்துகிறார் இந்தத் திருமந்திரத்தில்.

இறைவன் இன்றி உடல், உயிர் இல்லை. அவன் உள்ளத்தில் உறைந்தே நிற்கின்றான். ஒளிவடிவாகவும் உள்ளான். அப்படி இருந்தும் அவ்வடிவை உயிர் அறிந்து கொள்ள முடியவில்லை என்றால் இதற்குக் காரணம் உயிருக்கான மறைப்பு என்னும் சக்திதான் என்கிறார்

திருமூலர்.

No comments:

Post a Comment