தினசரி தியானம்
யந்திரம்
யந்திரங்களுள் மிக அற்புதமானது யாக்கை என்னும் யந்திரம். இறைவனை அடைதற்கு இது உதவுகிறது.
உயிரற்ற யந்திரங்கள், உயிருற்ற யந்திரங்கள் என இரண்டுவித யந்திரங்கள் உண்டு. மனிதனால் பொருத்தப்பெற்ற மனிதன் போன்ற யந்திரம் உண்டு. அது நடக்கவும் பேசவும் செய்யும். ஆனால் அதற்கு உயிரோ உணர்வோ இல்லை. பின்பு, மனிதர் என்னும் உயிர் யந்திரமோ கடவுளையே அறிய வல்லது.
இவ்வுடம்பு நீங்குமுனே எந்தாய்கேள் இன்னருளாம்
அவ்வுடம்புக் குள்ளே அவதரிக்கக் காண்பேனோ?
-தாயுமானவர்
No comments:
Post a Comment