நிம்மதி அருளும் நெமிலி ஸ்ரீபாலா
காஞ்சிக்கு காமாட்சி, மதுரைக்கு மீனாட்சி, காசிக்கு விசாலாட்சி
அதே போன்று நெமிலிக்கு பாலா ஆம்..... வேலூர் மாவட்டம்
அரக்கோணம் வட்டம் நெமிலி என்ற அழகான ஊரிலே கடந்த
150 ஆண்டுகளாக அருள் மழை பொழிந்து வருகிறாள் அன்னை பாலா. அன்னை பால நெமிலிக்கு வந்த வரலாறு சுவாரஸ்யமானது.
சிவம் பெருக்கும் சீலர் நெமிலி டி கே சுப்பிரமணி அய்யர் கனவிலே 10 வயதுப் பெண் ஒருவள் பச்சை பாவாடை உடுத்திக்கொண்டு நான் தான் பாலா உன் வீட்டுக்கு விக்கிரகமாக வருவேன். உன் இல்லத்துக்கு அருகே உள்ள குசஸ்தலை ஆற்றில் என்னைத்தேடு என்று அருள் வாக்கு தந்தாள் 2 நாட்கள் ஆற்றிலே தேடியபோது கிடைக்காமல் அடம் பிடித்த பாலா மூன்றாவது நாள் தேடியபோது தான் தனது விளையாட்டை நிறுத்தி கண்டு விக்கிரகமாக சுண்டு விரல் உயரத்திலே அந்த அழகு சுந்தரி அவருக்குக் கிடைத்தால்.
கடந்த நான்கு தலைமுறைகளாக ஐயரவர்கள் வீட்டுக் கூட்டத்தையே தனது மண்டபமாக்கி அருளாட்சி புரிந்து வருகிறாள். திருமணம் , திருமகவு , திருமனை , திருக்கல்வி என வந்தவர்க்கெல்லாம் வாரி வாரி வழங்கி வருகிறாள் தன அருளால் . தற்போது பீடத்தை நான்காவது தலை முறையைச் சார்ந்த ஸ்ரீ பாலா பீடாதிதி கவிஞர் நெமிலி எழில் மணி மற்றும் அவரது பிள்ளைகள் பாபாஜி , மோகன்ஜி பராமரித்து வருகின்றனர்.
பாலாவை காண வேண்டுமா , அவளே உங்களை கூப்பிடுவாள் , கவலை வேண்டாம்
No comments:
Post a Comment