Tuesday, September 25, 2012

சிவகங்கை தீர்த்த குளம்

சிவன் கட்டுப்படுத்திய சிவகங்கை தீர்த்த குளம்




விருதுநகர் மாவட்டம்  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ராஜபாளையம்
ரோட்டில்  பிரசித்தி பெற்ற வைதியநாதசுவாமி கோவில் உள்ளது.
இந்த கோவிலை யொட்டியுள்ள சிவகங்கை தீர்த்தத்தில் பிரும்ம
தேவர், அகத்தியர் போன்றோல் மூழ்கி நீராடி இருக்கிறார்கள்.

பாதாளத்தில் இருந்து பொங்கி வந்த தண்ணீரை கட்டுப்படுத்த
முடியாமல் தவித்தனர் அப்போது சிவபெருமான் வெள்ளமென
சீறிப்பாய்ந்த தண்ணீரின் வேகத்தை தடுத்து நிறுத்தி அமைதிப்படுத்தினார்.

சிவனால் கட்டுப்படுத்தப்பட்ட நீர் என்பதால் இது 'சிவகங்கை
தீர்த்த குளம்' என அழைக்கப்படுகிறது.  

No comments:

Post a Comment