Thursday, September 13, 2012

உருளைக்கிழங்கு போண்டா

உருளைக்கிழங்கு போண்டா

போண்டாக்கள் பலவிதம் ,

போண்டா, மைசூர் போண்டா ,  உருளைக்கிழங்கு  போண்டா இப்டி
இன்னும் புதுசு  புதிசா எவ்ளவோ இருக்கு


நாம இப்ப உருளைக்கிழங்கு போண்டா எப்டின்னு பாக்கலாம்


இதுக்கு முக்கியமா என்ன வேண்டும் , உருளைக்கிழங்கு



தேவையானவை :-

உருளைக்கிழங்கு   1 கிலோ
கடலை மாவு             1/2 கிலோ
காரப்பொடி                  4 டீஸ்பூன்
ஆபசொடா                  1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி            1 பிஞ்
பச்சை மிளகாய்         5
வெங்காயம்                 3
துருவிய இஞ்சி          கொஞ்சம்
உப்பு                                 தேவைக்கேற்ப
பெருங்காயம்              கொஞ்சம்
கடுகு, உளுத்தம்பருப்பு  தாளிக்க


செய்முறை :- கடலை மாவுடன் ,காரப்பொடி, பெருங்காயம்
உப்பு, ஆப்ப சோடா சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக
பிசைந்து வைத்துக்கொள்ளவும்.

உருளைக்கிழங்கை சுத்தம் செய்து  வேகவைத்து,தோல் உரித்துவைத்துக்கொள்ளவும்.

வெங்காயம் , பச்சை மிளகாய் பொடி பொடியாக நறுக்கி வைக்கவும்

வாணலியில் எண்ணைவிட்டு , கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து
நறுக்கிய உருளைக்கிழங்கு , வெங்காயம் , பச்சை மிளகாய் , மஞ்சள்
பொடி சேர்த்து நன்றாக வதக்கவும் .

அடுப்பில் இருந்து இறக்கி சூடு ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக
பிடித்து வைக்கவும் .





இந்த சிறு உருண்டைகளை முன்னமே தயார் செய்து வைத்துள்ள
கெட்டியான கடலைமாவு  கலவையில் தோய்த்து எடுத்து
அடுப்பில் வாணலியில் உள்ள எண்ணையில் போட்டு பொரித்து
பொன்னிற கலரில் வரும்வரை வேக விட்டு எடுத்து வைக்கவும்





சுவைக்க இனிக்கும் , சுப்பர் உருளைக்கிழங்கு போண்டா ரெடி
தொட்டுக்க சட்னி, சாம்பார், ஏதாவது  கெட்ச்அப் .
 .


No comments:

Post a Comment