Thursday, September 13, 2012

வெங்காய பகோடா

வாங்க  சாப்பிடலாம்  வெங்காய பகோடா

மழை காலம் இனி வரும் காலங்கள் , சூடா ஏதாவது சாப்பிடனும்
அப்டின்னு தோணும் , கொஞ்சம் சிக்கனமா , சீக்கிரமா சுவையா
சாப்பிடனும்னா  அதுக்கு இருக்கவே இருக்கு பகோடா , அதுவும்
வெங்காய பகோடா


தேவையானவை:

கடலை மாவு  2 கரண்டி
அரிசி மாவு       1 கரண்டி
வெங்காயம்     2
பச்சைமிளகாய்  3
கருவேப்பிலை  கொஞ்சம்
அப்பா சோடா     ஒரு பிஞ்
உப்பு  தேவையான அளவு

மேலே சொன்ன எல்லாத்தையும் நல்லா கொஞ்சமா தண்ணி விட்டு
கலந்து , கொஞ்சம் என்னை சுடவச்சு அதையும் இந்த மாவுல விட்டு
கெட்டியா பிசைஞ்சு வச்சுக்கணும் .

இப்ப அடுப்புல எண்ணை  வாணலி ஏற்றி , எண்ணை  காஞ்சதும்
அதுல பிசைஞ்சு வச்ச மாவ உதிர்த்தா மாதிரி போட்டா வெங்காய
பகோடா பிரமாதமா வரும்.




சாப்பிடலாமா வெங்காய பகோடா , பக்கத்ல யாரெல்லாம் இருக்காங்க
குடுங்க எல்லாருக்கும்.

குறிப்பு:- தேவைப்பட்டா முந்திரி சேர்த்துக்குங்க இன்னும் சுவை
                  நல்லா இருக்கும் யார் வேணாம்னு சொன்னது 

  

No comments:

Post a Comment