வெங்காயம் முருங்கக்கா , முள்ளேங்கி சாம்பார் By:-Savithri Vasan
"வெங்காயம் முருங்கக்கா , முள்ளேங்கி சாம்பார்
எங்கேயும் கிடைக்காது இதுபோல ........ வாங்க "
இன்னைக்கு வீட்ல என்ன சமையல் ?
சாம்பார் !!
கேட்கும் ஆளுக்கு சுவாரசியம் இருக்காது
அதே நீங்க வெங்காயம், முருங்கக்கா, முள்ளேங்கி சாம்பார்ன்னு
சொல்லிப்பாருங்க,
கொஞ்சம் அவருக்கு நாக்குல நீர் சுரக்கும்
அதுவும் அரைச்சுவிட்ட சாம்பார்ன்னு சொல்லுங்க , அப்டியே
வீடு வரைக்கும் வந்து சாப்பிட்டு விட்டு போவார்
அப்டி என்னங்க இருக்கு இந்த கூட்டணியில்???
நாட்ல எவ்ளோ கூட்டணி வந்திருக்கு , உடைந்து போயிருக்கு
அனா இந்த கூட்டணி , எத்தனை நூற்றாணடுகளைக் கடந்து
போயிட்டிருக்கு .....
இதுதான் சமையலின் விஷேசம் , கைமணத்தின் பெருமை
தேவையானவை:
சின்ன வெங்காயம் 50 கிராம்
முருங்கக்காய் 2
முள்ளேங்கி 2
பருப்பு 1 ஆழாக்கு
புளி கரைசல் 2 கப்
தாளிக்க:-
மிளகாய்வற்றல்
கடுகு ,
வெந்தயம்
உளுத்தம் பருப்பு
கருவேப்பிலை
வெங்காயம் தோல் உரித்து , என்னை விட்டு வதக்கி
வச்சிடுங்க.
பருப்பில் மஞ்சள் பொடி , பெருங்காயம் சேர்த்து
குக்கர்ல (5 விசில்) வேக வைங்க .
முருங்கக்காய் , முள்ளேங்கி நறுக்கி ஒரு பாத்திரத்தில்
போட்டு , கொஞ்சம் பெருங்காயம் சேர்த்து , புளி கரைசல்
அதில் விட்டு ஒரே ஒரு பச்சை மிளகாய் நறுக்கி போட்டு
குழம்பு பொடி 2 ஸ்பூன் போட்டு அடுப்புல யேத்துங்க
(சிம்ல அடுப்பு இருக்கட்டும்)
வெந்த பருப்பை நன்றாக மத்து கொண்டு மசித்து
கொஞ்சம் ரசத்துக்கு தெளிவா எடுத்து வைங்க மீதி
பருப்ப அடுப்பில் கொதிக்கும் சாம்பார்ல விடுங்க.
பருப்பு சேர்த்ததும் பக்கத்து வீட்ல/ அடுத்த போர்ஷன்ல
கேப்பாங்க , என்னங்க இன்னைக்கு வெ , மு , மு சாம்பாரா
அப்டின்னு................. இல்லையா???
நல்லா கொத்திவந்ததும் , வாணலில கொஞ்சம் எண்ணை
விட்டு மிளகாய் வற்றல், வெந்தயம், கடுகு , உளுத்தம்பருப்பு
தாளிச்சு போடுங்க
கருவேப்பிலை கிள்ளி போடுங்க
சாம்பார இறக்கி வைங்க , எதுக்கும் ஒரு கப்ல கொஞ்சம்
எடுத்து வைங்க அக்கம் பக்கத்து வீட்லேந்து யாரவது
நிச்சயம் கேப்பாங்க
அரைத்து விட்ட சாம்பார்
இது ஒன்னும் பெரிசா இல்லைங்க சாம்பார் பொடி போடுவதற்கு
பதிலாக நான் சொல்லறதெல்லாம் வறுத்து அரைச்சு விழுதா
சேர்த்திடுங்க
விழுது அரைக்க
தணியா
கடலைப் பருப்பு
மிளகாய் வற்றல்
தேங்காய்
தேங்காய் நீங்கலாக மற்றவற்றை வறுத்து
மிக்சியில் தேங்காயும் சேர்த்து அரைச்சு விழுதா
எடுத்து வச்சுக்கணும், பருப்பு சேர்க்கும் பொழுது
இதையும் சேர்த்துடுங்க ,

No comments:
Post a Comment