மாலாடு
இது பெரும்பாலும் திருநெல்வேலி சார்ந்தவர்கள்
அதிகம் செய்யும் இனிப்பு , வீட்டில் எந்த ஒரு விசேஷமானாலும்
மாலாடு இல்லாத பண்டிகையோ , விசேஷங்கள் இருக்க முடியாது
இது செய்வது எளிது , தின்பது எளிது , சுவை சொல்லவே வேண்டாம்
தேவையானவை :-
உடைத்தக்கடலை 1 கப்
சர்க்கரை 1 கப்
நெய் 1 கப்
ஏலக்காய் 5 (பொடி செய்து கொள்ளவும் )
முந்திரி 5 (சிறிது சிறிதாக உடைத்துக்கொள்ளவும் )
அடுப்பில் மிதமான சூட்டில் உடைத்தக்கடலையை லேசாக
வறுத்துக்கொள்ளவும் , (மனம் கூடும்).
பிறகு சர்க்கரை, ஏலக்காய் , உடைத்தக்கடலை மிக்சியில்
நன்றாக நைசாக அரைத்துக்கொள்ளவும் .
பிறகு அடுப்பில் வாணலியில் 1 கப் நெய்விட்டு அதில் முந்திரியை
போட்டு வருத்தப்பின் பொடித்துவைத்த உடைத்தகடலை , சர்க்கரை
மாவை போட்டு ஒரு பெரட்டு , பெரட்டி எடுக்கவும் .
இப்பொழுது வேண்டும் அளவில் மாலாடு பிடித்து வைக்கவும்
அளவு உங்கள் விருப்பம் போல் அமையலாம்.
கல்யாணங்களில் சீர் வைக்க பெரிது பெரிதாக பிடித்து
வைத்துக்கொள்ளலாம் அதற்கேற்ப தேவையான பொருட்களின்
அளவும் கூட்ட வேண்டும்.
மாலாடு வேணுமா , மனம் விரும்பும் மாலாடு வேணுமா

No comments:
Post a Comment