தினசரி தியானம்
நைவேத்தியம்
உனக்கு நைவேத்தியமாகப் படைப்பதற்கேற்ற நல்வாழ்வை நான் யாண்டும் வாழ்ந்து வருவேனாக.
தெய்விகப் பேரியல்பு மனிதனிடத்து மறைந்திருக்கிறது. அதை ஞாபகமூட்டுதற்கான வாழ்வே நல் வாழ்வு ஆகிறது. பிறரோடு மனிதன் செய்கிற இணக்கம் அவர்களிடத்துள்ள பேரியல்பை முன்னணிக்குக் கொண்டு வருவதாயிருக்க வேண்டும். அதை வளர்ப்பதற்கான சொற்களும் செயல்களுமே மேலான சொற்களும் செயல்களும் ஆகின்றன.
அட்டாங்க யோகமும் ஆதாரம் ஆறும் அவத்தை ஐந்தும்
விட்டேறிப் போன வெளிதனிலே வியப் பொன்றுகண்டேன்
வட்டாகிச் செம்மதிப் பாலூறல் உண்டு மகிழ்ந்திருக்க
எட்டாத பேரின்பம் என்னை விழுங்கி யிருக்கின்றதே.
-பட்டினத்தார்
No comments:
Post a Comment