Wednesday, September 19, 2012

கிருபை

கிருபை





அன்பு முற்றுகிறபோது யாவுமே அவனாகத்தெரியும். ஒன்றிடம் அன்பு
இன்னொன்றிடம்   என்றில்லாமல், எல்லாம் அவனானதால்
எல்லாவற்றிடமும் ஏற்ற தாழ்வில்லாமல் அன்பாக இருப்போம்.
அன்பற்ற வாழ்வு வாழ்ந்து    மனுஷ்ய ஜன்மாவை வருதாவாக்கிக்
கொள்ளாமல்  இருக்க பக்தியே உதவுகிறது.

பக்தியால் படிப்படியாக லௌகிக கஷ்ட்டங்களை  போக்கடித்துக்
கொள்ளலாம்; அல்லது கஷ்டத்தைப்   பொருட்படுத்தாத நிலைக்கு மனோபாவத்தை உயர்த்திக்கொள்ளலாம்; மனத்தின்  அழுக்கைப்
போக்கிக் கொள்ளலாம்; அலைகிற மனசை  ஒருமுகப்படுத்தலாம்;
 ஈஸ்வரனின் கல்யாண குணங்களை நாமும் பெறலாம்; என்றும்
அழிவில்லாத சாசுவதமான அன்பைப் பெற்று ஆனந்திக்கலாம்.

இவை எல்லாவற்றிற்கும்  மேலாக கர்ம பலனைத் தருகிறவனைத்
தஞ்சம் புகுந்தால்தான், அவன் கர்மகதிக்குக் கட்டுப்பட்டு
சம்சாரத்திலிருந்து நம்மை விடுவித்து முடிவில் முக்தி தருவான்.

அதாவது அவனேதான் நாமாகியிருப்பது, எல்லாமுமாகி இருப்பது
என்று அனுபவத்தில் அறிந்து கொண்டு, அப்படியே இருக்கச் செய்வான்.
இந்த அத்வைத்த ஞானத்தையும் , முக்தியையும் அவன் கிருபயாலேயே
பெறலாம். பக்தி செலுத்துவதற்கு இத்தனை காரணம் இருக்கிறது. 


--ஜகத்குரு காஞ்சி  காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்யா
ஸ்வாமிகள் 

No comments:

Post a Comment