Tuesday, September 4, 2012

வாழைப்பூ வடை


வாழைப்பூ வடை  :  By:- Savithri Vasan




வாழைப்பூ அய்ந்து பொடி பொடியா நறுக்கி
மோரும் நீரும் கலந்த கலவையில் போட்டு
வைக்கவும்



துவரம் பருப்பு ஒரு பங்கு,
கடலைப்பருப்பு ஒரு பங்கு
ஒரு மணிநேரம் ஊர வைக்கவும்
நீட்டு மிளகாய் வற்றல்.......4
பச்சை மிளகாய்......................4
உப்பு ..........தேவைக்கேற்ப 
பெருங்காயம்.......சிறிதளவு 

ஊறவைத்த பருப்பு எல்லாம் ஒன்றாக
சேர்த்து மிசியில் கொர கொரவென்று
அரைத்துக்கொள்ளவும்.

நறுக்கிய வாழைப்பூவை அரைத்த
மாவுடன் சேர்த்து , கருவேப்பிலை
பொடி பொடியாக நறுக்கி போட்டு
சிறு சிறு வடைகளாக தட்டி


அடுப்பில் மிதமான சூட்டில் வாணலியில்
எண்ணை வைத்து , வடைகளை போட்டு எடுத்து ,


சூடு ஆறியவுடன், சுவைத்து ரசிக்கவும்


என்னங்க இன்னைக்கு வீட்ல , தலைல மல்லிபூ 
இலைல வாழைப்பூ வடையா , ஹம்  , நடத்துங்க 

No comments:

Post a Comment