Friday, September 7, 2012

சாம்பார் பொடி (குழம்பு பொடி)


சாம்பார் பொடி (குழம்பு பொடி)

குழம்பு வைக்கறதே சொன்னா குழம்பு பொடி யார் 
செஞ்சு குடுப்பாங்க 

குறிப்பை படித்து , குன்றாத சுவையுடன் குழம்பு பொடி 
தயார் செய்யுங்க ........



(குண்டு) மிளகாய் ......1/2 kg
தனியா .....................1/2 kg
நீட்டு மஞ்சள் ...........100 grm
கடுகு .........................50 grm
வெந்தயம் ................50 grm
மிளகு ......................100 grm
துவரம் பருப்பு ..........100 grm
கடலை பருப்பு ..........100 grm
இவை எல்லாம் ஒன்றாக சேர்த்து

1. (மிளகாயை சுத்தம் செய்து கொள்ளவும்)
2. (நல்லா வெய்யில் அடிக்கிறது கொஞ்சம் வெய்யில்ல காய 
    வச்சு மெஷின்ல அரைச்சா நல்லது) 



மிளகாய் மிஷினில் அரைத்து
வீட்டுக்கு கொண்டு வந்து
தரையில் பேப்பர் போட்டு பொடியை
அதில் கொட்டி சுமார் 2 மணி
நேரம் காற்றாட ஆற விடவும்.



பிறகு காற்றுபுகாத டப்பாவில்
போட்டு விருப்பம் இருந்தால்

குளிர் சாதனா பெட்டியில் ப்ரீசர்
பகுதியில் வைக்கவும்.

இது என் அம்மாவின் கைப்பக்குவம்
இதில் அவரவர் விருப்பம் போல்
மாற்றம் செய்ய விரும்பினால் செய்யவும்
சுவை அதற்கு தகுந்தாற்போல் வரும்

சிலர் கருவேப்பிலை சேர்ப்பார்கள் அது அவரவர் விருப்பம்


குழப்பமா , கலக்கமா குழம்பு பொடி செய்வதில் தயக்கமா
குறிப்பை படியுங்க , குதூகலமா செய்யுங்க .....குழம்பு பொடி 

No comments:

Post a Comment