Sunday, September 2, 2012

தினசரி தியானம்



கிருத யுகம்

கருணாகரனே, உன்னைச் சார்ந்திருக்கத் தெரிந்து கொள்ளுமளவு நான் கிருதயுக வாசியாவேன்.

நல்ல மனமுடையவர் ஈண்டு இப்பொழுதே கிருதயுகத்தைக் காணலாம். சுயநலத்தை ஒழிப்பது அதற்கு முதல்படி. பொறாமை, பகை, புறங்கூறுதல் ஆகியவைகளைப் புறக்கணிப்பது அடுத்தபடியாகும். உள்ளன்பு ஓங்குதலில் பொற்காலம் என்னும் கிருத யுகம் உதயமாகும்.

தற்போதத் தாலே
தலைகீழ தாக ஐயன்

நற்போத இன்புவர
நாட்செலுமோ பைங்கிளியே.
-திருமந்திரம்

2 comments:

  1. உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.

    ReplyDelete