Sunday, September 2, 2012

நாலடியார் -- (346/400)

சக்கரச் செல்வம் பெறினும், விழுமியோர்
எக்காலும் சொல்லார் மிகுதிச்சொல்; - எக்காலும்
முந்திரிமேற் காணி மிகுவதேல், கீழ்தன்னை,
இந்திரனா எண்ணி விடும்.

பொருள்:- இந்த உலகம் முழுவதையுமே தமக்கு
உரிமையாகக் கொண்டது போன்ற பெரும் செல்வத்தைப்
பெற்றாலும், சான்றோர்கள், எந்தக் காலத்திலும் வரம்பு

கடந்த சொற்க்களைப் பேச மாட்டார்கள். ஆனால், முந்திரி
அளவே உள்ள தனது செல்வத்தின்மேல், காணி அளவு
கூடுதல் செல்வம் அதிகமாகச் சேர்ந்து விட்டாள்,
கீழ்மக்கள் தன்னை தேவேந்திரனாகவே எண்ணிக்கொண்டு
வரம்பு கடந்து அகந்தையுடன் நடப்பர்.

No comments:

Post a Comment