Sunday, September 16, 2012

பரங்கிக்காய் பால் கூட்டு

பரங்கிக்காய் பால் கூட்டு

பூசணி வகையில் இதுவும் ஓன்று , வெள்ளையாய் இருப்பதை
கல்யாண பூசணி என்பார்கள் , பரங்கிக்காயை மஞ்சள் பூசணி
என்பார்கள் .

இதில் காய், துகையல், குழம்பு என பலவகையான சமையல்
செய்து மகிழலாம் . நாம் இப்போது செய்து பழகப்போவது
பால் கூட்டு.


தேவையானவை -

பரங்கிக்காய் 1/4 கிலோ
பால்                  1 கப்
துருவிய வெல்லம்  1 கப்
தேங்காய் துருவல் /தேங்காய் பால் 1 கப்
மஞ்சள் பொடி   சிட்டிகை

தாளிக்க :-
கடுகு , உளுத்தம் பருப்பு ,1 மிளகாய் வற்றல்


பரங்கிக்காய் வாங்கி சுத்தம் செய்து தோல் சீவி சிறிது சிறிதாக
நறுக்கி வைத்துக்கொள்ளவும் இதனுடன் 2 டம்பளர் தண்ணீர்
சேர்த்து வேக வைக்கவும் .



ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டு அதனுடன்
அரிசிமாவு கலந்து வைக்கவும் .





காய் நன்றாக வெந்ததும் அதில் அரிசிமாவு கலந்த தண்ணீரை
சேர்த்து , கொஞ்சம் பால் விட்டு , கொஞ்சம் மஞ்சள் பொடி சேர்த்து
துருவிய வெல்லம்  சேர்த்து இன்னும் கொஞ்சநேரம் வேக விடவும்
பிறகு துருவிய தேங்காய் அல்லது தேங்காய் பால் சேர்த்து
மிகவும் இறுகி இருந்தால் கொஞ்சம் நீர்சேர்த்து இளக்கவும் .

சுவையான பரங்கிக்காய் பால் கூட்டு தயார் ஆகிவிட்டது




அடுப்பில் இருந்து இறக்கி , இதில் கடுகு உளுத்தம் பருப்பு
மிளகாய் வற்றல் தாளிக்கவும்


  கூட்டத்த கூட்டுங்க ; பால் கூட்ட சாப்பிடுங்க 

No comments:

Post a Comment