நேந்திரம் வாழையின் வரலாறு
கேரளப்ப் பகுதியில் அதிக அளவில் விளையும்
சுவை மிகுந்த நேந்திரம் வாழைக்கும் திருகாட்கரை
கோவிலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அந்த
பகுதிய சேர்ந்த பக்தர் ஒருவர் தனது விளைநிலத்தில்
வாழை மரங்கள் பயிரிட்டு இருந்தார். ஆனால் அவை
வளர்ந்தும் எந்த பலனும் தராமல் அழிந்து போனது.
இவ்வாறு பலமுறை நிகழ்ந்ததால் அவர் மனவேதனை
அடைந்தார்.
பின்னர் அந்த பக்தர் தங்கத்தால் செய்யப்பட வாழைக்
குலை ஒன்றை திருக்காட்கரை அப்பனுக்குச் சமர்ப்பித்து
தனது குறையை முறையிட, பக்தரின் வேண்டுகோளை
ஏற்று இறைவன் தனது அருட்பார்வையை வாழை மரங்கள்
மீது செலுத்தினார். இதையடுத்து உயர்ந்து வளர்ந்திருந்த
வாழை மரங்களில் குலைகள் காய்த்துத்தள்ளின.
பெருமாளின் நேத்திரங்களின் (கண்களின்) அருட்பார்வை
பெற்று செழித்து வளர்ந்த வாழைக் குலைகள், அன்றிலிருந்து
'நேத்திரம் வாழை' என பெயர் வந்து , அது மருவி நேந்திரம்
என பெயர் பெற்றது. பெருமாளை 'நேர்ந்து' கொண்டு இந்த
வாழைப்பழங்கள் உருவானதால் 'நேத்திரம்' வாழை என்ற
பெயர் ஏற்ப்பட்டதாகவும் கூற்று நிலவுகிறது.

நேத்திரம் , நேந்திரமானதோ
வாழையடி வாழையாக வரும் வரலாறு

No comments:
Post a Comment