Thursday, September 13, 2012

விளாம்பழ பச்சடி

விளாம்பழ பச்சடி   :-  By:- Savithri Vasan






விளாம்பழம் நல்ல பழமாக வாங்க வேண்டும்

அது எப்டி ஓட்டுக்குள்ள இருக்கறது நல்லதா கெட்டதான்னு
எப்டி பாக்கறது ?



உண்மைதாங்க ஒரு வாழைப்பழம் , மாம்பழம் , மற்ற பழங்களை
புறத்தோற்றம் கொண்டு கணிக்க முடியும்  ஆனால் விளாம்பழம்
அப்படி இல்லை .

நீங்க என்ன பண்ணுங்க விளாம்பழத்தை கையில் எடுத்து முதலில்
கத்துகிட்ட வச்சு குலுக்கி பாருங்க உள்ள உருண்டு ஓடும் சத்தம்
வந்தா அது நல்ல பழுத்தழம்.

கைல பழத்தை எடுத்து தரையில் குறைந்த உயரத்தில் கீழ
போட்டு பாருங்க அது பந்து போல் துள்ளி வந்தால் அது
பழுக்க தயார் நிலையில் உள்ள பழம் , வீட்டுக்கு வாங்கி
சென்று 2 - 3 நாள் கழித்து உபயோகப்படுத்தலாம்.

சரி இப்ப உங்களுக்கு பழம் எப்படி வாங்கனும்னு தெரிஞ்சு போச்சு
பச்சடி எப்டி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க .


தேவையானவை :-

பழம் 1
உப்பு  சிட்டிகை
வெல்லம் : தேவைக்கேற்ப



விளாம்பழத்தை உடைத்து உள்ளே இருக்கும் பழத்தை
ஒரு பாத்திரத்தில் போட்டு கொஞ்சம் வெல்லம் , கொஞ்சம்
உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கைகளால் நன்றாக கரைத்து
வைக்கவும்

10 நிமிடம் கழித்து அதில் 2 வெத்த  மிளகாய், கொஞ்சம் கடுகு
தாளிங்க

பச்சடி தயார்




அந்த பழத்தின்  ஓடு என்ன பண்ணினீங்க , தூக்கி போட்டுடீங்கள
எடுங்க எடுங்க அத அதுல ஒரு ரெசிப்பி இருக்கு

பத்திரமா எடுத்து வைங்க அதுக்கும் ஒரு உபயோகம் சொல்லறேன்



"விட்டதடி ஆசை விளாம்பழத்தின் ஓட்டோடு "

அனால் பச்சடி ஆசை? அது எப்டிங்க விடும் ???

No comments:

Post a Comment