Thursday, September 13, 2012

நாலடியார் - (358/400)

நாலடியார்   -  (358/400)

 ஏட்டைப் பருவத்தும் இற்பிரந்தார் செய்வன,
மோட்டிடத்துஞ் செய்யார் முழுமக்கள்;-- கோட்டை
வயிரஞ் செறிப்பினும் வாட்கண்ணாய்!  பன்றி
செயிர்வேழம் ஆகுதால்  இன்று .


பொருள்:- வாள்  போன்ற கூறிய கண்களை உடையவனே!
தனது கொம்புகளில் பூண் பூட்டினாலும் பன்றியானது வீரம்
காட்டும் யானையைப் போல் போர் செய்யும் வல்லமை
உடையது அல்ல. அதுபோல் சிறந்த குடியில் பிறந்த சான்றோர் 
தம்மிடம் பொருள் இல்லாமையால் தளர்ச்சி உண்டான
காலத்திலும் செய்கிற நல்ல தர்மச் செயல்களை மூடர்கள்
தம்முடைய உயர்வான காலத்திலும்கூட செய்ய மாட்டார்கள்.

No comments:

Post a Comment