நாலடியார் - (369/400)
இனியார்தம் நெஞ்சத்து நோயுரைப்ப, அந்நோய்
தணியாத உள்ளம் உடையார், --- மணிவரன்றி
வீழும் அருவி விறன்மலை நன்னாட!
வாழ்வின் வரைபாய்தல் நன்று.
பொருள்:- ரத்தினக் கற்களை வாரிக்கொண்டு வந்து வீழ்கின்ற
அருவிகளோடு கூடிய சிறந்த மலைகள் உள்ள நல்ல நாட்டை
உடையவனே! தங்களுக்கு இனிமையானவர்கள் தம் உள்ளத்தில்
இருக்கும் கவலையை துன்பத்தை தாமே ஆற்றிக்கொள்ள முடியாமல்
எடுத்துக் கூற, அந்த துன்பங்களைப் போக்குவதற்கு எண்ணாத
உள்ளத்தை உடையவர்கள் உயிர் வாழ்தலைக் காட்டிலும்,
மலையிலிருந்து கீழே விழுந்து தம் உயிரை விட்டு விடுவதே
அவருக்கும் இந்த உலகத்துக்கும் நல்லதாகும்.

No comments:
Post a Comment