Monday, September 24, 2012

புடலங்காய் கறி

புடலங்காய் கறி


புடலங்காய்ல  நிறைய ஐய்ட்டம்  பண்ணலாம்

புடலங்காய் கறி
புலலங்காய் கூட்டு
புடலங்காய் பச்சடி
புடலங்காய் உசிலி





புடலங்காய் துண்டு துண்டாக நறுக்கி கொஞ்சம் தண்ணீர் விட்டு
வேகவைக்கவும்(10-நிமிடம்) , வெந்ததும் தண்ணீரை வடித்து
புடலங்காய் பிழிந்து எடுத்துக்கொள்ளவும் .




வாணலியில் மிதமான சூட்டில் , என்னை கொஞ்சமாக வைத்து
கடுகு , மிளகாய் வற்றல் , உளுத்தம்பருப்பு தாளித்து வேகவைத்த
புடலங்காய் போட்டு உப்பு சேர்த்து  நன்றாக வதக்கவும் .

அடுப்பில் இருந்து இறக்கி , தேங்காய் துருவல் சேர்க்கவும்




குறிப்பு:- இதனுடன் பயத்தம்பருப்பு /கடலைப்பருப்பும் வேகவைத்து சேர்க்கலாம்


போய்யா  பெரிய புடலங்கா அவன் அப்டின்னு சொல்லுவோம்
ஆனா  புடலங்காய்ல  செஞ்ச சமயல அப்டி சொல்லுவோமா  

No comments:

Post a Comment