Sunday, September 23, 2012

நாலடியார் - (368/400)

நாலடியார்   -  (368/400)


உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப்
புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருக்கிக்
கடைக்கால் தலைக்கண்ணதாகிக் குடைக்கால்போல்
கீழ்மேலாய் நிற்கும் உலகு!


பொருள்:-பரம்பரையாக பெரும் செல்வந்தர்களாக இருந்த குடியினர்களும், கல்வி, அறிவு, ஒழுக்கங்களில் நிறைந்த சான்றோர்களும் தங்கள்
நிலைமைகளில் இருந்து மாறி, வறியவர்களாக கெட்டுப் போகிறார்கள்.
இழி குணத்தரான வேசி மக்களும், கீழ் மக்களும் பெருகிச் செல்வந்தர்கள்
ஆகின்றனர். கால் புறத்தில்  இருக்க வேண்டியது தலைப் புறத்தில்
இருப்பதாக இடம் மாறி, குடையின் காம்புபோல், இந்த உலகமானது
கீழ் மேலாய் நிற்கின்ற தன்மையினை உடையதாக இருக்கின்றது.

1 comment: