நாலடியார் - (366/400)
கல்லாக் கழிப்பர் தலையாயார்; நல்லவை
துவ்வாக் கழிப்பர் இடைகள்; கடைகள்
'இனிதுன்ணோம்! ஆரப் பெறேம்யாம்! என்னும்
முனிவினாற் கண்பா டிலர்.
பொருள்:- மக்களில் தலை சிறந்தவர்கள், நூல்களைக்
கற்றறிந்து, நல்ல கருத்துக்களை ஆழ்ந்து தெளிந்து
அதன்படி தம் வாழ்நாளைக் கழிப்பார்கள். நடுத்தர
தன்மையுடையவர்கள் நல்ல வழியில் கிடைத்த
கைபோகங்களை எல்லாம் அனுபவிப்பதில் காலம்
கழிப்பார்கள். கீழ்த்தரமான கடை மக்களோ, "நாம்
இனிமையானவற்றை உண்ண வில்லையே
நிறையப் பொருள்களை சேர்க்க வில்லையே" , என்று
எண்ணி வெறுப்புடன் இரவு முழுவதும் தூக்கம்
வராமல் கஷ்டப்படுவார்கள்.

No comments:
Post a Comment