Friday, September 21, 2012

காரடையான் நோன்பு அடை

காரடையான் நோன்பு அடை   BY:Savithi Vasan

இதுவும்  பெரும்பாலும் பண்டிகை ஒட்டி செய்யப்படும் பலகாரம்

மாசியும் பங்குனியும் கூடும் நேரம் செய்யப்படும் நோன்பிற்காக
செய்யப்படும் அடை இது.

இதில் வெல்ல அடை , உப்பு அடை என்று இரண்டுவகையான
அடைகள்

சரி பண்டிகை பற்றி தெரிந்து கொண்டோம்  , இனி செய்முறை அறிந்து
செய்து சுவைத்து மகிழ்வோம்

தேவையானவை :-

அரிசி ஊறவைத்து, நிழலாட உணர்த்தி , மிக்சியில் அரைத்து ,
அரைத்த மாவை சலித்து , அதை வாணலியில் போட்டு வறுத்து
எடுத்து வைக்கவும் .

முதலில் வெல்ல அடை :-

தேவையானவை:
அரிசிமாவு : 1 ஆழாக்கு
வெல்லம்   :  2 ஆழாக்கு
வெள்ளை காராமணி (50 கிராம்) முதல் நாள் இரவே ஊற வைத்து விடவும்
ஏலக்காய் : பொடி செய்து வைத்துக்கொள்ளவும்

செய்முறை:-

1 டம்பளர் தண்ணீர் விட்டு அதில் வெல்லம்  போட்டு கரைத்து , கொதிக்க வைத்து ,அழுக்கை அகற்றி சுத்தம் செய்து வைக்கவும் .

காராமணியை வேகவைத்து அதை வெல்லத் தண்ணீருடன் சேர்த்து
கொதிக்கவிடவும் , அதில் அரிசிமாவை போட்டு நன்றாக கிளறவும்
இதில் ஏலக்காய் பொடி சேர்க்கவும் .

மாவு கெட்டிப் பதத்தில் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்

சூடு ஆறியவுடன் , சிறு சிறு அடைகளாக தட்டி , இட்லி தட்டில் வைத்து
ஆவியில் வைத்து எடுக்கவும் .




உப்பு  அடை :-

தேவையானவை :-
அரிசி மாவு 1 ஆழாக்கு
வெள்ளை காராமணி 50 கிராம்
தேங்காய் பல்லு பல்லாக நறுக்கியது
பச்சை மிளகாய்
வெத்த மிளகாய்
தாளிக்க "- கடுகு , உளுத்தம் பாப்பு

வாணலியில் எண்ணை  விட்டு , கடுகு, உளுத்தம் பருப்பு , மிளகாய் வத்தல்
பச்சை மிளகாய் ,  கருவேப்பிலை தாளித்து , 4 டம்பளர் தண்ணீர் விட்டு
வேகவைத்த காராமணி சேர்த்து , பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் ,
தேவையான உப்பு போட்டு , தண்ணீர் கொதிவந்ததும் , அரிசிமாவை போட்டு
நன்றாக கிளறி அடுப்பில் இருந்து .

 சிறு சிறு அடைகளாக தட்டி இட்லி தட்டில்  வைத்து ஆவியில் வேகவைத்து
எடுக்கவும் .




பிறகு நோம்பு சம்பிரதாயங்கள் முடித்து




உருகாத வெண்ணையும் , ஓர்  அட்டையின் நோன்பும்
ஒருநாளும்  என்கணவன் எனைப்பிரியாதிருக்க

No comments:

Post a Comment