Sunday, September 16, 2012

நாலடியார் - (361/400)

நாலடியார்   -  (361/400)



மழை திளைக்கும் மாடமாய், மாண்பமைந்த காப்பாய்,
இழைவிளக்கு நின்றிமைப்பின் என்னாம், -- விழைதக்க
மாண்ட மனையாளை இல்லாதான் இல்லகம்
காண்டற்கு அரியதோர் காடு!


பொருள்:- ஒருவனது வீடு, மேகங்கள் தவழ்ந்து
செல்லும்படியான உயர்ந்த மாடிகளை உடையதாக,
சிறப்பு பொருந்திய காவலை உடையதாக, மணிகள்
இழைத்த விளக்குகள் ஒளி வீசப்பெற்றதாக இருந்தாலும்
என்ன பயன்? பெருமைபடத் தக்க மனைவியைப்
பெறாதவனது அந்த வீடு, கண்களால் காண்பதற்கும்
கூடாத ஒரு கொடிய காட்சியாகும் .


"நல்ல மனைவி , நல்ல பிள்ளை , நல்ல குடும்பம் தெய்வீகம் " 

1 comment: