Thursday, September 6, 2012

நாலடியார் ---(351/400)

                            நாலடியார் ---(351/400)
                            -----------------------------

ஆர்த்த அறிவினர், ஆண்டிளையர் ஆயினும்
காத்தோம்பித் தம்மை  அடக்குப; - முத்தொறுஉம்
தீத்தொழிலே கன்றித் திரிதந்து, எருவைபோல்
போத்தரார், புல்லறிவி னார்.

பொருள்:- நிறைந்த அறிவினை உடையவர்கள்,
வயதால், இளையவராக இருந்தாலும், தம் புலன்களை
தீய வழிகளில் செல்லாமல் தடுத்து, பாதுகாத்து,
தம்மை அடக்கி நன்னெறியில் ஒழுகுவர். ஆனால்,
கீழான அறிவை உடைய சிற்றறிவாளர்களோ,
கழுகு போல் வயது முதிரும் தோறும் தீய
காரியங்களிலேயே முனைந்து, அலைந்து
தம் குற்றத்திலிருந்து நீங்க மாட்டார்கள்.

No comments:

Post a Comment