Thursday, September 6, 2012

தேங்காய் பொடி

தேங்காய் பொடி


ரெண்டு கப் தேங்காய் துருவல்
மிளகாய் வற்றல் : 5
உளுத்தம் பருப்பு  : 3 டீஸ்பூன்
பெருங்காயம் : சிறிதளவு
உப்பு : தேவைக்கேற்ப
புளி :- மிகவும் சிறிதளவு ( தேவைப்பட்டால்)



தேங்காவை நன்றாக சிவக்க வருத்துக் கொள்ளவும்

பிறகு மிளகாய், பெருங்காயம் , வறுத்துக்கொள்ளவும்

உளுத்தம்பருப்பு  தனியாக வறுத்து வைத்துக்கொள்ளவும்




முதலில் மிக்சியில் உளுத்தம் பருப்பை ஓன்று இரண்டாக
பொடி செய்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்

பிறகு பெருங்காயம், உப்பு , புளி , மிளகாய்வற்றல்
போட்டு அரைத்துக்கொண்டு அதனுடன் வறுத்த
தேங்காயை போட்டு   சிறிது நேரம் (2 சுத்து)
அரைக்கவும்.








இதனுடன்  ஓன்று இரண்டாக உடைத்த உளுத்தம்பருப்பை
கலந்து , காற்று புகாத ஒரு டப்பாவில் எடுத்து வைக்கவும் .

வச்சுட்டு அப்டியே மறந்துடாதீங்க , தினமும்
ஏதாவது ஒரு வகையில் அதை உபயோகப்படுத்துங்க

ஏன்னா இது கொஞ்ச நாள் தான் நல்லா இருக்கும்
அதாங்க இதோட ஷெல்ப்  லைப் (Shelf Life)  கம்மி.

பூண்டு விருப்பத்தின் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளலாம்


தென்னைய பெத்தா இளநீரு ,பிள்ளைய பெத்தா கண்ணிரு

தேங்காய் பொடி இருந்தா ஆனந்தக் கண்ணீர்



No comments:

Post a Comment