Tuesday, September 25, 2012

3-ன் பெருமை

என் 3-ன் பெருமை




மூன்று ரேகைகள் கொண்டதாக, நாம்
நெற்றியில் விபூதி தரிக்கின்றோம், அவை
பிரம்ம ரேகை, விஷ்ணு ரேகை, மகேஸ்வர
ரேகையாகும்.

க - என்றால் பிரம்மன், அ - என்றால் சிவன்,
ம - என்றால் விஷ்ணு. இம்மூவரும் எவரது
கண்ணிலிருந்து உதித்தனரோ அவரே காமாட்சி.

சிவலிங்கத்துக்கு மூன்று பாகங்கள் உண்டு அவை:-
அடிப்பகுதி - பிரம்ம பாகம் (உயிர்)
நடுப்பகுதி - விஷ்ணு பாகம்(பெண்)
மேல் பகுதி - சிவன் பாகம் (ஆண்)

மூன்று தோஷங்கள் - பிரம்ம ஹத்தி , வீர ஹத்தி
சாய ஹத்தி

மனிதனுக்கு மூன்று வித்த சரீரங்கள் அவை:-
ஸ்தூல சரீரம் (அன்னமயம்)
சூட்சம சரீரம் ( பிராணமயம், மனோமயம்)
காரண சரீரம் (ஆனந்தமயம் )

அ - உ - ம எனும் மூன்றெழுத்தும் சேர்ந்து
பிரணவமான ஓம் ஆகிறது.

மூன்று இலைகளை கொண்ட வில்வத்திற்கு
'த்ரிதளம்' என்று பெயர்.

முக்கண் உடைய சிவனுக்கு 'த்ரியம்பகன்'
என்றொரு பெயரும் உண்டு

திரிசூலம் எனப்படுவது
இச்சா, கிரியா, ஞான சக்திகளை குறிக்கும்

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்றும்
ஓன்று சேரும் புனிதமான இடத்திற்கு
திரிவேணி சங்கமம் என்று பெயர்

முருகன் கையிலுள்ள வெல் (ஞானம்) மயில்
(விந்து) சேவல் (நாதம்)


கடமை கண்ணியம் கட்டுப்பாடு இதுவும் 3 தானே 

No comments:

Post a Comment