தினம் ஒரு திருப்புகழ் - மதிகெடாதிருக்க - நாள் - 46
ராகம்: சௌராஷ்ட்ரம் தாளம் : அங்கதாளம்
உறவுகிளை தாயர் தந்தை ...... மனைபாலர்
மலசலசு வாச சஞ்ச ...... லமதாலென்
மதிநிலைகெ டாம லுன்ற ...... னருள்தாராய்
சலமறுகு பூளை தும்பை ...... யணிசேயே
சரவணப வாமு குந்தன் ...... மருகோனே
பலகலைசி வாக மங்கள் ...... பயில்வோனே
பழநிமலை வாழ வந்த ...... பெருமாளே.
கருத்துரை: கங்கா நதியையும், அறுகம் புல்லையும்,
தும்பை மலரையும், பூளைப் பூவையும், அணிந்துள்ள
சிவகுமாரரே! சரவணப் பொய்கையில் தோன்றருளியவரே
பழனி மலையில் எழுந்தருளியவரே! உயிர்களைக் கட்டுப்படுத்தும்
மலபந்தங்களாகியசுற்றத்தார், துணைவர் , தாய் தந்தையர்
மனைவி, மக்கள் முதலியவர்களாலும், மலஜல பிராண
வாயுக்களால் உண்டாகும் துன்பங்களாலும், அடியேனுடைய
அறிவுநிலை கெட்டுப்போகாமல் இருக்குமாறு, உன்றன் திருவருளைத்
தந்து காத்தருள வேண்டும்,
தொடரும் திருப்புகழ் ...................................தொடர்ந்து வாருங்கள்
No comments:
Post a Comment