Saturday, December 14, 2013

ரங்கனுக்கு ரதம்



ரங்கனுக்கு ரதம்





"தக்ஷிண ஹாலாஸ்யம்'' என்று சிறப்பித்து அழைக்கப்படும் தென்னாங்கூர் கிராமம் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் உள்ள தலம். முன்பு ஆறு காடுகளுக்கு நடுவில் இருந்ததால் "ஷடாரண்ய úக்ஷத்திரம்'' என்றும் கூறுவர். புராண வரலாறுப்படி மலையத்வஜ பாண்டிய மன்னனுக்கு மீனாட்சி அம்மனை மூன்று வயது குழந்தையாகக் கிடைக்கப் பெற்றது இத்தலத்தில்தான். எனவே ஸ்ரீமீனாட்சி அம்பாளின் ஜனன ஸ்தலம் என்ற சிறப்பும் இவ்வூருக்கு உண்டு.


இத்தலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீரகுமாயி ஸமேத ஸ்ரீபாண்டுரங்கன் ஆலயம். தன்னுடைய குருநாதரான ஸத்குரு ஸ்ரீஞானானந்தகிரி சுவாமிகளின் மீது கொண்ட அளவு கடந்த பக்தியால் இவ்வாலயத்தைத் தோற்றுவித்தார் குருஜிஸ்வாமி ஹரிதாஸ்கிரி. இவ்வாலயத்தில் எழுந்தருளும் பிரம்மாண்டமான மூர்த்திகளுக்கு பலவிதமான அலங்காரங்களும், உபசாரங்களும், உற்ஸவங்களும், நாமசங்கீர்த்தனங்களும் நாள்தோறும் சிறப்பாக நடைபெற்று பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். சோழ, பல்லவ அரசர் காலத்து கட்டிடக் கலையை ஒருங்கே கொண்டு அமைந்துள்ள ஆலயம். மேலும் புகழ் சேர்க்கும் வகையில் தற்போது பக்தர்களின் உதவியுடன் பாண்டுரங்கன் - ரகுமாயிக்கு ஸ்வர்ண ரதம்( ஞான ஜோதிர் சக்தி ரதம்) சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த ரதத்தில் அமைந்துள்ள நாரதர், தும்புரு, ஸ்ரீஸத்குரு நாதர், ஸ்ரீகுருஜி, நாமதேவர், துகாராம், ஞானேஸ்வர், சோகாமேளா போன்ற சாதுக்கள் மற்றும் ரதத்தின் மேல் பாகத்தில் பாண்டுரங்கன் - ரகுமாயி, தட்சிணாமூர்த்தி, யோக நரசிம்மர், மஹா விஷ்ணு ஆகியோரின் திருஉருவங்கள் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சங்கள்.


இந்த ரதம் ஸத்குருநாதர் ஆராதனை வைபவத்தின்போது சமர்ப்பிக்கப்பட உள்ளது. பாண்டுரங்கன் ஆலயத்தின் எதிரில் உள்ள ஸ்ரீமடவளாகத்தில் ஸத்குரு ஸ்ரீஞானானந்தகிரி சுவாமிகளின் ஆருத்ரா பௌர்ணமி ஆராதனை விழா டிச: 14 தொடங்கி டிச: 17 வரை பல்வேறு ஹோமங்களுடனும், பாதுகாபூஜை, லட்சார்ச்சனை, சங்கீதக் கச்சேரிகள், கதாகாலúக்ஷபங்கள், நாமசங்கீர்த்தனம் போன்ற நிகழ்ச்சிகளுடனும் நடைபெறுகிறது. குரு ஆராதனை டிச: 17ஆம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது.


தகவலுக்கு: 81109 21554

No comments:

Post a Comment