Sunday, December 22, 2013

தினம் ஒரு திருப்புகழ் - பாத கமலம் பெற

தினம் ஒரு திருப்புகழ் - பாத கமலம் பெற  - 39 




ராகம்: பெஹாக் / காபி                                          தாளம்: ஆதி 



விந்ததி னூறி வந்தது காயம்
வெந்தது கோடி ...... யினிமேலோ

விண்டுவி டாம லுன்பத மேவு
விஞ்சையர் போல ...... அடியேனும்

வந்துவி நாச முன்கலி தீர
வண்சிவ ஞான ...... வடிவாகி

வன்பத மேறி யென்களை யாற
வந்தருள் பாத ...... மலர்தாராய்

எந்தனு ளேக செஞ்சுட ராகி
யென்கணி லாடு ...... தழல்வேணி

எந்தையர் தேடு மன்பர்ச காய
ரெங்கள்சு வாமி ...... யருள்பாலா

சுந்தர ஞான மென்குற மாது
தன்றிரு மார்பி ...... லணைவோனே

சுந்தர மான செந்திலில் மேவு
கந்தசு ரேசர் ...... பெருமாளே.


கருத்துரை : அடியேனுடைய உள்ளத்துள் செழுஞ் ஜோதியாக விளங்கி, 
கண்களில் நடனம் புரிபவரும், பொன் போன்ற சடையை உடையவரும், 
அடியவருக்கு உதவுபவரும், எங்கள் சுவாமியுமான சிவகுமாரரே!
வள்ளி மணாளரே! செந்திலான்டவரே! எத்தனயோ கோடி முறை சரீரம்  நெருப்பில்  வெந்தமிழ்ந்து  இனியாவது உன்னை விட்டு நீங்காமல், உனது பாத மலரை விரும்புகின்ற புலவர்களைப் போல, அடியேனும் வழமையான ஞான வடிவு பெற்று, நிலைத்த பதவியை அடைந்து, எனது பிறப்பாலாகிய களைப்பு நீங்குமாறு உனது பதமலரை தந்தருள்வீர். 


தொடரும் திருப்புகழ் .......................................தொடர்ந்து வாருங்கள் 

No comments:

Post a Comment