Wednesday, November 20, 2013

ஓட்ஸ் நட்ஸ் கேக் - Oats Nuts Cake



ஓட்ஸ் நட்ஸ் கேக் - Oats Nuts Cake  by Velammal Gurusamy 

மைதாவை ஓட ஓட விரட்ட இருக்கவே இருக்கு ஓட்ஸ்


 


தேவையானவை:-

ஓட்ஸ் : 1 கப் 
சர்க்கரை  1/2 கப் 
பட்டர்:- 1/4 கப் 
பேகிங் பௌடர் 1/4 டீஸ்பூன் 
பால் :-  1/4 கப் 
வெண்ணிலா எசன்ஸ் : 1 டீஸ்பூன் 
முந்திரி , பாதம் தேவைக்கேற்ப



மைதாமாவை தவிர்க்கணும் அப்படீன்னு நினைக்கிறப்போ,
அதற்குப் பதிலாக ஓட்ஸ் மாவை பயன் படுத்தலாம் .ஓட்ஸ் 
மாவில் கேக் ,நல்ல சுவையா சாப்டா வந்திருக்கு.


ஒருகப் ஓட்ச்சை மிக்சியில் நைசாக பொடித்துக் கொண்டேன்.
அரைக்கப் சர்க்கரையும் பொடித்தேன் .கால்கப் பட்டர் ,ஒருடீச்பூன் பேக்கிங் பவுடர் ,கால்டீச்பூன் பேக்கிங் சோடா ,கால்கப்பால் ,ஒருடீச்பூன் வெனிலா எஸ்சென்ஸ் ,கொஞ்சம் முந்திரி பாதாம் பொடித்து எடுத்துக் கொண்டேன்.

முதலில் பட்டரோடு சர்க்கரையை சேர்த்து நன்கு கரையும் வரை 
கிளறினேன் அதோடு ஓட்ச்மாவு , பேக்கிங்க்பவுடர், பேக்கிங் 
சோடா சேர்த்து மறுபடியும் கிளறினேன். பால் ,வெனிலா எஸ்சென்ஸ் சேர்த்தேன். 

கேக்மாவு தோசை மாவைவிட கொஞ்சம் கெட்டியாக இருக்க வேண்டும் .அதற்கு ஏற்றால் போல் பாலை கூட்டியோ குறைத்தோ சேர்க்கலாம்.

கப்கேக் ட்ரேயில் பட்டர் தடவிய கேக் பேப்பரை வைத்து ,அதில் முக்கால் பாகம் நிரம்பும் வரை மாவை ஸ்பூனால் ஊற்றி மேலே நட்ஸ் பொடியை தூவி ஓவனில் 150 டிகிரியில் 25 நிமிடங்கள் பேக் செய்தேன் .ஓ.....ஓ .....ஓ ஓட்ச்கேக்கின் மணம் குழந்தைகளை கூவி அழைத்து ஓடிவர செய்தது 

No comments:

Post a Comment