Friday, November 22, 2013

சுசினி அடை (சுரைக்காய் அடை )



சுசினி அடை (சுரைக்காய் அடை )

By :Velammal Gurusamy




அடைகள் பலவிதம் .ஒவ்வொன்றும் ஒரு விதம் .அதில் போடும் காய்களும் பல விதம் ஒவ்வொன்றின் சுவையும் ஒருவிதம் .இப்படி ஒரு பாட்டு மாதிரி பாடணும்னு தோணுது .



பலரது  கை பக்குவத்தால் பலவகையான சுவையான அடை வகைகள் 
நமது ரெசிபி டாக்குமெண்டை நிரப்பி விட்டன .நான் இங்கு சுரைக்காய்க்கு பதிலாக சுசினி என்னும் காயைபோட்டு அடை பண்ணியிருக்கிறேன்.

இது உருவத்தில் வெள்ளரிக்காயைபோல இருந்தாலும்சுவையில் சுரைக்காயை ஒத்திருக்கிறது .

அடைமாவு தயாரிக்க , 

ஒரு கப் இட்லிஅரிசி ,
அரைக்கப் கடலைப்பருப்பு ,
அரைக்கப் துவரம்பருப்பு ,
ஒருடேபிள்ஸ்பூன் உழுந்து(உளுந்து) .
மிளகாய் வத்தல் - 5
இஞ்சி 1 துண்டு
பெருங்காயம் - 1 டீஸ்பூன்

அரிசியை தனியாகவும் ,பருப்பை தனியாகவும் மூன்று 
மணிநேரம் ஊறவைக்கவும் 

முதலில் அரிசியோடு, மிளகாய் வத்தல் ,இஞ்சி ,உப்பு ,பெருங்காயப்பொடி சேர்த்து கொரகொரப்பாக அரைத்துவிட்டு பருப்பையும் கொரகொரப்பாக அரைத்து அதோடு சேர்த்து ,இன்னும் பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலையும் கலந்து வைத்துவிட்டு ,சுரைக்காயை தோல்நீக்கி துருவி அதையும் கலந்து மிதமான தீயில் தோசைக் கல்லில் நல்லெண்ணெய் விட்டு மெல்லிதாக சுட்டெடுத்தேன் .சைட்டிஷ் இல்லாமல் நான் அப்படியே சாப்பிடுவேன் .

எங்க ஊரில் திருநெல்வேலி அடைக்கு அவியல் தான் சைட்டிஷ் ,தேங்காய் சட்னியும் சூப்பராய் இருக்கும் சுரைக்காய் அடை எப்படி இருக்குதென்று சுட்டு சுவைத்து பார்த்து சொலுங்கள் .

No comments:

Post a Comment