Thursday, November 28, 2013

வெஜிடபிள் பிக்கிள்

வெஜிடபிள் பிக்கிள்  -  By:- Velammal Gurusamy

புரட்டாசி மாசத்து வெயிலைப் பார்த்ததும் ஊறுகாய் போடும் 
ஆசை வந்தது, அதுவும் வெஜிடபிள் ஊறுகாய். இப்பல்லாம் 
காய்களை ஊறுகாய் மாதிரி தொட்டு நக்கித்தான் சாப்பிட
வேண்டியிருக்கு.விலை அப்படி.

இருந்தாலும் ஆரோக்கியமான வாழ்வுக்கு சாதத்தின் அளவு காய் சாப்பிடனுமுன்னு மருத்துவம் சொல்கிறது. நாம் காய்களை பல 
விதத்திலும் பயன் படுத்துகிறோம். அதில் ஊறுகாயும் ஒரு விதம்.

இந்த ஊறுகாய்க்கு,

நாலு மடங்கு வெட்டிய காய் என்றால்,
ஒரு மடங்கு எலுமிச்சை ஜூஸ்,
ஒருமடங்கு உப்பு ,
அரைமடங்கு மிளகாய் வத்தல் பொடி,
அரைமடங்கு கடுகுப்பொடி,
கால்மடங்கு வெந்தயப்பொடி,
தேவையான அளவு பெருங்காயப்பொடி.
ஒரு மடங்கு நல்லெண்ணெய்.



தேவை .
கிழங்கு ,தண்ணீர் காய்கள் தவிர,
காரட்,
பீட்ரூட்,
பீன்ஸ்,
கொத்தவரை,
பாவக்காய்,
இஞ்சி,
பூண்டு,
ஜூஸ் பிழிந்துவிட்டு மீதமுள்ள எலுமிச்சையின் தோலில் சிலவற்றையும் காயுடன் சேர்த்து ஒருஇன்ஞ்ச் நீளமாக வெட்டிக்கொண்டேன்.



.கொத்தவரையும் ,பீன்ஸையும் மறுபடியும் நீளவாக்கில் வெட்டினேன் ,வெட்டியகாய்களை அளந்து அதில் நாலில் ஒருபங்கு அளவில் ஜூஸை காயில் விட்டு கிளறி ஒருஇரவு முழுவதும் ஊறவைத்தேன்.

 மறுநாள்காலையில் மற்ற பொருட்களையும் எண்ணெய்யும் ஊற்றி கிளறி வெய்யிலில் காயவைத்தேன் .மூன்று நாட்களுக்கு பிறகு வெஜிடபிள் பிக்கிள் சாப்பிட தயாராக இருந்தது.

No comments:

Post a Comment