Saturday, November 16, 2013

தினமும் ஒரு திருப்புகழ் - நூல் / காத்தருள


தினமும் ஒரு திருப்புகழ் - நாள் 6 - நூல் / காத்தருள



ராகம்:- ஷண்முகப்ரியா / பைரவி

தாளம்: த்ரிபுடை ...



முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.


கருத்துரை:-முத்தைப் போல் இளநகையுடைய
தெய்வயானை அம்மையாருக்குத் தலைவரே!
ஞான சக்தியாகிய வேலாயுதத்தை உடையவரே!
சரவணப் பொய்கையில் தோன்றியவரே!
மோக்ஷ வீட்டிற்கு மூல காரணமானவரே! பரசிவ
குருவே! தேவர்களால் வணங்கப் பெற்று அசுரர்களை
அழித்தவரே! நாராயணமூர்த்தி மெச்சுவதற்க்குத் தகுந்த 
பரம்பொருளே. அடியேனை  ரக்ஷித்து
காப்பாற்றி அருள் புரிவதாகிய ஒருநாள் உளதோ?

தகவல்:- நன்றி , திருப்புகழ் திரட்டு ,

தொடரும், திருப்புகழ்........ தொடர்ந்து வாருங்கள் .....


No comments:

Post a Comment