Thursday, October 31, 2013

ஹஸ்தினாபுரம் சாவித்ரி



ஹஸ்தினாபுரம் சாவித்ரி


ஹஸ்தினாபுரத்தில் உள்ள குருúக்ஷத்திரத்தில் அமைந்துள்ளது சாவித்ரி தேவி ஆலயம். புராண கால நகரான இங்கு அமைந்துள்ள அன்னையின் ஆலயம், சக்தி பீட வரிசையில் 39வது பீடமாக விளங்குகிறது. தேவியின் வலது கணுக்கால் விழுந்த இடமாக இது கருதப்படுகிறது.

இந்தக் கோயிலை "ஸ்ரீதேவி கூப் பத்ரகாளி மந்திர்' என்கிறார்கள். கூப் என்றால் கிணறு. தேவியின் வலது கணுக்கால் விழுந்த இடத்திலேயே இந்தக் கிணறு உள்ளதாம். அம்பிகையின் திருநாமம் சாவித்ரி. கால பைரவரை ஸ்தாணு (அஸ்வந்த்) என்பர்.

ஸ்ரீதேவி கூப் பத்ரகாளி மந்திர் - குருúக்ஷத்திர நகரில் உள்ளது. செந்தூரம் பூசிய நுழைவு வாயில். எதிரே கலைநயம் கொண்ட வெண் பளிங்கால் செய்யப்பட்ட தேவியின் அங்கமான வலது கணுக்கால் மீது வெள்ளிக் குடை, கிரீடம், பாதத்தில் கொலுசு, தண்டை, மெட்டி முதலியவற்றுடன் தரிசனம் தருகிறார் அன்னை.

மகாசக்தி பீடங்களில் இங்கு மட்டுமே தேவியின் அங்கத்தை அடையாளமாகக் காண முடியும். இந்தத் திருவடியின் கீழ் பெரிய தாமரையின் கீழ் கிணறு ஒன்று காணப்படுகிறது. அதற்கு அருகில் சாவித்ரி தேவியின் ஆலயம் உள்ளது. பக்தர்கள் பத்ரகாளி என்றே அன்னையை வழிபடுகின்றனர்.

அபய-வரத கரங்களுடன் திகழும் பத்ரகாளியின் இடது பாதத்தின் கீழ் சயனநிலையில் சிவபெருமான் உள்ளார். அன்னைக்கு அருகே வெள்ளி திரிசூலம். செந்தூர கணபதியும் கருமைநிற கால பைரவரும் அன்னையின் இருபுறங்களிலும் காட்சியளிக்கின்றனர்.

மகா வாராஹி நவராத்திரி, சாரதா நவராத்திரி, ராஜமாதங்கி நவராத்திரி மற்றும் லலிதாம்பிகை நவராத்திரி என்ற நான்கு நவராத்திரிகளோடு தீபாவளியிலும் இங்கே கோலாகலமாக விழா நடைபெறுகிறது. வசந்த நவராத்திரியில் 1008 கலசங்களில் புனித நீர் நிரப்பி மா இலை, தேங்காய், பூமாலைகளைக் கலசங்களில் வைத்து, 1008 இளங் கன்னியர் அவற்றை பக்தியுடன் தலையில் வைத்தபடி நடைபெறும் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சி.

பாரதப் போரில் வெற்றி பெற பாண்டவர்கள் காளியை பூஜித்தார்களாம். போரில் பாண்டவர்கள் வெற்றி அடைந்ததும் நேர்த்திக் கடனைத் தீர்க்க ஸ்ரீகிருஷ்ணன் ஒரு தங்கக் குதிரையை அம்பிகைக்கு அர்ப்பணித்ததாகவும் கூறப்படுகிறது. இதைப் பின்பற்றியே, இங்கு வரும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனைப் பூர்த்தி செய்ய, அன்னைக்கு மண் அல்லது மரத்தால் ஆன குதிரைகளை காணிக்கையாக அளிக்கின்றனர்.

No comments:

Post a Comment