Wednesday, October 30, 2013

தெரிந்து கொள்ளுங்கள்

தெரிந்து கொள்ளுங்கள்



பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோயில் எடுகாட்டூர்கோன் பெருந்தச்சன் என்பவரால் கட்டப்பட்டது என்பதைக் கல்வெட்டு மூலம் அறியலாம்.

ஒரே சிற்பியால் வடிவமைக்கப்பட்ட நடராஜர் சிலைகள் ஐந்து உள்ளன. சிதம்பரம், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கட்டாரிமங்கலம், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செப்பரை, கரிசூழ்ந்தமங்கலம், கருவேலங்குளம் ஆகிய இடங்களில் உள்ள கோயில்களில் இந்த சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த நமசிவாயமுத்து என்பவரே இந்தச் சிலைகளை வடித்தவர்.

ராமாயணத் திருத்தலங்கள்:

அயோத்தி - ராமரின் அவதார ஸ்தலம். இது சரயு நதிக்கரையில் உள்ளது.

பக்ஸார் - கவுதம முனிவர் ஆசிரமம் இருந்த இடம். அகலிகைக்கு ராமரால் மோட்சம் கிடைத்த இடம்.

சோனேபூர் - ஜனகர் ஏர் உழும் போது சீதையைக் கண்டெடுத்த ஸ்தலம்.

மிதிலை - சீதைக்கு திருமணம் நடந்த இடம்

பரதகுண்டம் - நந்தி கிராமம். ராமரின் பாதுகையை பரதன் வழிபட்ட இடம்.

சித்திர கூடம் - ராமரும், பரதனும் சந்தித்துக் கொண்ட இடம். குகன் கங்கையைக் கடக்க உதவிய இடம்.

பஞ்சவடி- ராவணனால் சீதை அபகரிக்கப்பட்ட இடம்.(நாசிக்)

கரவாடி (ஆந்திரா) - கரன் என்ற அரக்கன் ராமனால் கொல்லப்பட்ட இடம்.

தொட்குருகாட்- ராவணனுக்கும் ஜடாயுவிற்கும் சண்டை நடந்த இடம்

கிஷ்கிந்தை - ரிஷிய முக பர்வதம். துங்க பத்திரா நதிக்கரையில் உள்ளது.

பத்ராசலம் - தண்டகாரண்யத்தில் ராமர் எழுந்தருளியிருக்கும் இடம். இங்கே ராமரின் பாதச்சுவடுகள்

உள்ளன.

பூதப்பாண்டி - ராவண சம்ஹாரத்திற்குப் பிறகு ராமர் அயோத்தியா திரும்பியபோது தங்கிய இடம்.

ராமேஸ்வரம் - இலங்கைக்குச் செல்ல சேது பாலம் கட்டத் துவங்கிய இடம்.

No comments:

Post a Comment