Thursday, August 22, 2013

பரமாச்சார்யாளும் - பிள்ளையாரும்


பரமாச்சார்யாளும் - பிள்ளையாரும்

தகவல்: மகா பெரியவாளின் தரிசன அனுபவங்கள்
பழக்கடை P.R. தியாகராஜன், கும்பகோணம்


ஈச்சங்குடி கணேசய்யர் என்பவர் இஞ்சினியராக
வேலை செய்து ஓய்வு பெற்றவர், மனைவியோட
பெரியவா தரிசனத்துக்கு வந்தார்.

பெரியவாளிடம் அவர்

" எனக்கு ஏதேனும் ஒரு கைங்கர்யம் செய்வதற்கு
உத்தரவானால் தேவலை" என்று பிரார்த்தித்தார்.
" எவ்வளவு தொகை செலவானாலும் பரவாயில்லை!"


பெரியவா, மத்த எல்லா பக்தர்களுக்கும் பிரசாதம்
குடுத்துட்டு, கணேசய்யாரிடம் சொன்னார்: கும்பகோணத்தில்
நிறைய பிள்ளையார் இருக்கு , அராமரத்தடி , ஆற்றங்கரை-
இங்கெல்லாம் மேற்கூரையில்லாத பிள்ளையார்கள் அதிகம்.
கும்பகோணம் டவுனை சுற்றி ஒரு கிலோமீட்டர்
வரையில் உள்ள எல்லாப் பிள்ளயார்களுக்கும் - கோவிலில்
இருந்தாலும் சரி , குளத்தங்கரையில் இருந்தாலும் சரி
எண்ணெய் சாற்றி அபிஷேகம் செய்து சந்தனப் பொட்டு
வைத்து ஊதுபத்தி ஏத்தி வைத்து, தேங்காய் , வாழைப்பழம்
வெற்றிலை பாக்கு நைவேத்தியம் செய்துவிடு அது போதும்."

"எனக்கு இந்த பூஜை புனஸ்காரமெல்லாம் பழக்கமில்லை 24
வயசுலயே வடக்கே போய் செட்டில் ஆயிட்டேன், அதுனால
உள்ளுரில் யாரிடமும் அவ்ளோ பரிச்சியம் கிடையாது"
என்றார் கணேச அய்யர் .

பெரியவா ராயபுரம் பாலு என்ற சிஷ்யரை கூப்பிட்டு
"கும்பகோணம் பழக்கடை தியாகுவுக்கு ஒரு லிகிதம்
எழுதிக்குடு அவன் எல்லாம் செய்து குடுப்பான்" என்றார்கள்.

அதுமட்டுமல்லாமல் இந்த கைங்கரியம் நிறைவேறியவுடன்
என்னையும் அழைத்துக்கொண்டு தரிசனத்துக்கு வரச்
சொன்னார்களாம் .

தம்பதிகள் எங்கள் வீட்டிற்கு வந்து உடனடியாக செயல்படத்
தொடங்கினோம்

மூன்று நாட்கள், ராஜா வேத பாட சாலை வேன் கிடைத்தது

ஸ்ரீமடம் வாசற்புறம் கருங்கல் தூணிலுள்ள பிள்ளையார்
உட்பட 168 பிள்ளையார்களுக்கு பூஜை செய்தோம். 5 டின்
நல்லெண்ணெய், 1/2 கிலோ சந்தானம், 1 கிலோ கற்பூரம்
50 பாக்கெட் ஊதுபத்தி, இவைகளை கோவிலிலுள்ள
பிள்ளையார் பூஜைகளுக்காக அங்கிருந்த சிவாச்சர்யர்களிடம்
ஒப்படைத்தோம். வெளியில் இருந்த பிள்ளையார்களுக்கும்
எங்களுக்குத் தெரிந்தபடி நாங்களே அபிஷேக பூஜை செய்தோம்


கை-கால் உடைந்து பின்னப்பட்டு இருந்த பிள்ளயார்களுக்கும்
பூஜை செய்யனுமா? என்று கேட்டதற்கு , " ஏன் கைகால்
உடைந்த மனுஷாள்ளாம் உலகில் வாழவில்லையா?
அதுபோல் தான், இதுவும்!" என்று கூறி அனைவருக்கும்
பூஜை செய்யும்படி உத்தரவிட்டார்கள்


அப்போது பெரியவா கர்நூல் அருகே ஒரு கிராமத்தில்
முகமிட்டிருந்தார்கள் .

கணேசய்யர் குடும்பமும் நானும் அங்கே சென்று
விவரங்களை கூறினோம்,

' இன்னும் 6 பிள்ளையார் இருக்கே? எப்படி விட்டு போச்சு
என்று பெரியவா கேட்டதும் எங்களுக்கு திகைப்பு ஏற்ப்பட்டது
'சாக்கோட்டை பக்கம் ஒரு பிள்ளையார், சுவாமிமலை போகும்
சாலையில், குடியானவர்கள் தெருவில், அவர்கள் மிகவும்
கோலாகலமாகக் கொண்டாடும் ஒரு பிள்ளையார்,
அரசலாற்றங்கரையில் ஒரு பிள்ளையார் , மரத்தடி பிள்ளையார்
என்று ஆறு இடங்களை குறிப்பிட்டு சொன்னார்கள் பெரியவா !

" அதனாலே பரவாயில்லை , ஊருக்கு போனதும் இந்த 6
பிள்ளையாருக்கும் அபிஷேக ஆராதனை பண்ணிவிடு"
என்று சமாதானப்படுத்தி எங்களுக்கு பிரசாதம் கொடுத்து
திருப்தியுடன் அனுப்பி வைத்தார்கள்.

No comments:

Post a Comment