Monday, April 22, 2013

ஜகம் நீ,........ அகம் நீ

ஜகம் நீ,........ அகம் நீ
---------------------------




விழுப்புரத்தில் சிறுவயதில் மகா பெரியவாளுடன் படித்த
முஸ்லிம் நண்பர் ஒருவர், தன்னுடன் படித்தவரே இப்போதைய
சங்கராச்சாரியார் என்று தெரிந்துகொண்டதும் அவரை எப்படியாவது
பார்த்துவிடவேண்டும் என்று தேனம்பாக்கம் வந்தார். பெரியவா
பாலாற்றங்கரையில் இருக்கிறார் என்றதும் நேராக ஓரிக்கை
பாலற்றங்கரைக்கே வந்துவிட்டார். வெகுநேரம் பழங்கதைகள்
எல்லாம் பேசிக்கொண்டிருந்தார்கள் இருவரும். புறப்படும்போது
அந்த முஸ்லிம் நண்பர் ' நீங்க இப்போ பெரிய மகன். மக்கள்
எல்லாரும் வந்து உங்களைப் பார்த்து வாழ்த்து வாங்கிட்டுப் போறாங்க
உங்களைப் பார்த்ததின் ஞாபகமாக எனக்கும் நீங்கள் ஏதாவது
தர வேண்டும் அதை நான் பத்திரமாக வைத்துக்கொள்வேன் என்றார்.

பெரியவா சிரிச்சுட்டார் . ' என்னைப் பார்த்தாய் அல்லவா? நான் ஒரு
சந்நியாசி என்கிட்டே என்ன இருக்கு? உனக்கு நான் என்ன தர முடியும்
இந்தக் காஷாய வஸ்த்திரம் ஒண்ணுதான் என்கிட்டே இப்போ இருக்கு !"
என்றார். சரி அதில் ஒரு துண்டை தாருங்கள் அது போதும் என்றார்.

சட்டென்று தம்முடைய காவி வஸ்திரத்திலிருந்து ஒரு சின்ன
துண்டை கிழித்து , தன் பால்ய கால சிநேகிதனுக்கு கொடுத்தார்
மகாபெரியவா.

அதை பெற்றுக்கொண்ட போது அந்த முஸ்லிம் நண்பர் அடைந்த
சந்தோஷத்துக்கு ஈடு இணை கிடையாது

No comments:

Post a Comment