தினசரி தியானம்
கள்ளன்
தாணாக்காரன் முன்னிலையில் திருடன் தனது தகாத தொழில் புரிவதில்லை. இறைவா, இமைப் பொழுதாவது உன் முன்னிலையை விட்டு நான் மறையமுடியாது. நீ பார்த்திருக்க, என்னை யாரும் பார்க்கவில்லை என்று நான் பயன்படாச் செயல் புரியலாகாது. உன் கண்காணிப்பை உணர்ந்து நான் கள்ளன் ஆகலாகாது.
விளக்கு எரியும் வீட்டிற்குள் திருடர் புகத் துணியார். மனத்தினுள்ளே தெய்வத்தின் ஞான விளக்கேற்றி வைத்திருக்கும்ப் பொழுது புல்லிய எண்ணங்கள் என்ற கள்ளர் புகுவதில்லை.
கள்ளன் அறிவூடுமே மெள்ளமெ(ள்)ள வெளியாய்க்
கலக்கவரு நல்ல உறவே.
-தாயுமானவர்
No comments:
Post a Comment