Friday, January 4, 2013
தேன் ஈ
தினசரி தியானம்
தேன் ஈ
தெவிட்டாத ஆனந்தத்தைத் தரும் தேவா, நான் தேனீ போன்று தூயதையே நாடுபவன் ஆவேனாக. தூயநிலை கிட்டவில்லை என்று துச்சத்தின்பால் நான் திரும்பலாகாது.
சாணத்தில் உதிக்கும் புழுவை எடுத்துச் சந்தனத்தில் வைத்தால் அது செத்துப் போம். அங்ஙனம் கயவர்களுக்கு நல்லாரிணக்கம் பெருவேதனையாகும். வீட்டு ஈ சில வேளை மலத்திலும் சில வேளை நல்ல தின்பண்டத்தின் மீதும் உட்காரும். இடைத் தரமான மக்கள் நலத்தையும் கெட்டதையும் மாறி மாறிச் செய்கின்றனர். நெஞ்சே, நீ தேன் ஈ போன்று நல்லதையே நாடு. நம் இறைவனுக்கு நீ சொந்தம் ஆவாயாக.
எத்திக்கும் தானாகி என்னிதயத் தேயூறித்
தித்திக்கும் ஆனந்தத் தேனே பராபரமே.
-தாயுமானவர்
Labels:
தினசரி தியானம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment