Thursday, December 6, 2012

அந்தக்கரணம்





தினசரி தியானம்



அந்தக்கரணம்

உலகைக் காண்பதற்குப் பயன்படுகிற அந்தக்கரணத்தை இறைவா, உன்னிடம் திருப்பி உன்னையே காணப் பழகி வருவேனாக.


அந்தக்கரணம் அல்லது மனம் புறவுலகைக் காண உதவுகிறது. கெட்ட மனமுடையவர்க்கு உலகம் கேடுடையதாகத் தெரிகிறது. மனம் நல்லதாக மாறுமளவு உலகும் நல்லதாகத் தோன்றுகிறது. தெய்வீக மனத்துக்கு தெய்வக் காட்சியே எங்கும் தென்படுகிறது. மனத்தை தெய்வத்தில் ஒடுக்கிவிட்டால் மனிதன் தெய்வத்தை அடையப்பெறுகிஆன்.


அந்தக் கரணம் அடங்கத் துறப்பதுவே
எந்தத் துறவினும்நன் றெந்தாய் பராபரமே.
-தாயுமானவர்

No comments:

Post a Comment