Saturday, December 29, 2012

நிர்விகற்ப சமாதி



தினசரி தியானம்



நிர்விகற்ப சமாதி

மனக்கொதிப்பு அடங்கினால் இறைவா, உனக்கும் எனக்கும் உள்ள தொடர்பு உள்ளபடி விளங்கும்.


காற்று அடிக்கும் பொழுது தடாகத்தில் மேற்பரப்பு மேடுபள்ளமுடையதாய்விடும். அதில் சந்திரனது பிம்பம் உள்ளபடி தென்படுவதில்லை. தேங்கிய தடாகத்தில் சந்திர பிம்பம் சந்திரன் போன்றது. தேங்கிய மனத்தில் பிரகாசிக்கும் ஜீவாத்மன் பரமாத்மா போன்றது. மனதற்ற நிலையில் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே. மனம் அற்றிருப்பது நிர்விகற்ப சமாதி.


நேச நிருவிகற்ப நிட்டையல்லால் உன்னடிமைக்கு
ஆசையுண்டோ நீயறியாத தன்றே பராபரமே.
-தாயுமானவர்

No comments:

Post a Comment