Wednesday, December 26, 2012

அசையாதிரு



தினசரி தியானம்



அசையாதிரு

அசைந்து கொண்டிருக்கும் அந்தக்கரணத்தைக் கொண்டு அசையாப் பொருளே, உன்னை நான் அறிவது எங்ஙனம்?


தேங்கியிருக்கிற தண்ணீர்ப் பரப்பிலே திங்களின் பிம்பம் தெளிவுறத் திகழ்கிறது. தண்ணீரில் திரைகளும் அலைகளும் அதிகரிக்குமளவு திங்களின் பிம்பம் பிளவுபட்டுப் போகிறது. சித்தம் அடங்கிச் சும்மாவிருக்கும்பொழுது அதற்கு அடிப்படையாயுள்ள ஆத்மப் பிரகாசம் நன்கு ஒளிர்கிறது.


வேண்டா விருப்பும் வெறுப்பும் - அந்த
வில்லங்கத் தாலே விளையுஞ் ஜனனம்
ஆண்டான் உரைத்த படியே - சற்றும்
அசையா திருந்துகொள் அறிவாகி நெஞ்சே.
-தாயுமானவர்

No comments:

Post a Comment