தினசரி தியானம்
நிலை
எனது உடல் வாழ்க்கை தேர் ஓட்டத்துக்கு ஒப்பானது. தேர் நிலைக்கு வருவது போன்று இறைவா, உன்னை அடையுங்கால் நான் நிலைக்கு வந்தவனாகிறேன்.
ஒவ்வொரு பொருளுக்கும் உற்ற நிலையுண்டு. தனது நிலையை அடையும் வரையில் எப்பொருளுக்கும் ஓய்வு இல்லை. நீரானது கடலைப்போய் அடையும் வரையில் அதற்கு நிலை தடுமாற்றமே நிகழ்கிறது. மனிதன் தெய்வத்தை அடையும் வரையில் அவன் நிலை தடுமாறித் தத்தளித்துக் கொண்டிருக்கிறான்.
தேடாத தேட்டினரே செங்கைத் துலாக் கோல் போல்
வாடாச் சமநிலையில் வாழ்வார் பராபரமே.
-தாயுமானவர்
No comments:
Post a Comment