Thursday, December 27, 2012

துரியம்



தினசரி தியானம்



துரியம்

மாறுபடுகிற மனநிலைக்கெல்லாமிடையில் அருட்பேறே, உன் உணர்விலேயே நான் ஓயாது திளைத்திருப்பேனாக.


நாள்தோறும் நனவு, கனவு, கனவற்ற உறக்கம் ஆகிய மூன்று அவஸ்தைகளில் நாம் மாறி மாறி உழன்று வருகிறோம். இம்மூன்று மனநிலைகளுக்கு நாம் அடிமைப்பட்டவர்களாகவும் இருந்து வருகிறோம். இம்மூன்றுக்கும் பொதுவாயும் இம்மூன்றினுள் தோயாதும் இருக்கிற அறிவு நிலையே துரியம்.


கருதும் அடி யார்கள் உளங் காணவெளி யாகுந்
துரியநிறை வான சுகமே பராபரமே.
-தாயுமானவர்

No comments:

Post a Comment