Monday, December 24, 2012

சஹஜ நிஷ்டை



தினசரி தியானம்



சஹஜ நிஷ்டை

சஹஜ நிஷ்டைக்கும் என் சிந்தைக்கும் வெகுதூரம். நான் ஏகமாய் நின்னோடிருக்கும் நாள் எந்த நாள்? இந்நாளில் அது முற்றுறாதோ?


அரசாங்க உத்தியோகஸ்தன் ஒருவன் தனது சொந்தக் காரியம் போன்று எத்தனையெத்தனை அலுவல்களையோ செய்து வருகிறான். ஆனால் தனக்கு அதிகாரம் வருவது அரசாங்கத்திடமிருந்து என்பதும், தான் செய்வதெல்லாம் அரசாங்கத்தின் அலுவல்கள் என்பதும் அவனுக்கு நன்கு தெரியும். அதேவிதத்தில் சஹஜ நிஷ்டையில் இருக்கிற ஒருவன் எண்ணிறந்த வியவகாரங்களுக்கிடையில் விச்ராந்தியில் இருக்கிறான்.


சட்டையொத்த இவ்வுடலைத்
தள்ளுமுன்னே நான் சகஜ
நிட்டையைப் பெற்று ஐயா
நிருவிகற்பங் காண்பேனோ?
-தாயுமானவர்

No comments:

Post a Comment