Wednesday, December 19, 2012

நின் செயல்



தினசரி தியானம்



நின் செயல்

பிரபஞ்சத்தில் நிகழ்வதெல்லாம் இறைவா, நின் செயல். என் செயல் என்று சிலவற்றுள் நான் உரிமை பாராட்டி பந்த பாசத்தை உண்டு பண்ணிக் கொள்கிறேன்.


மின் சக்தியால் இயக்கப்பெற்றுச் சக்கரம் சுழல்கிறது; தீபம் எரிகிறது; ஒலிபெருக்கி ஓலமிடுகிறது; அடுப்பு வெப்பம் கொடுக்கிறது. அப்படித் தெய்வத்தின் ஆணையால் இயற்கையில் யாவும் நடைபெறுகின்றன. இதை அறியாத மனிதன் தன்னைச் செயலுக்குக் காத்தாவாக்கிக் கொள்கிறான்.


பார்க்கின் அண்டபிண்டப் பரப்பனைத்தும் நின்செயலே
யார்க்குஞ் செயலிலையே ஐயா பராபரமே.
-தாயுமானவர்

No comments:

Post a Comment