Saturday, November 24, 2012

காந்திக்கு லத்தி

காந்திக்கு லத்தி பரிசளித்ததை நினைவு கூறும் விழா: பீகார் மாநிலத்தில் கோலாகலம்!



தேசப்பிதா மகாத்மா காந்திக்கு, லத்தி பரிசளித்ததை நினைவு படுத்தும் வகையில், பீகார் கிராம மக்கள், "லத்தி மகோத்சவம்என்ற விழாவை, ஆண்டு தோறும், விமரிசையாக கொண்டாடுகின்றனர்.தேசப்பிதா மகாத்மா காந்தி, 1934ல், பீகார் மாநிலத்தில் உள்ள, கோர்காட் என்ற கிராமத்துக்கு வந்திருந்தார்.நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஆறுதல் கூறுவதற்காக, அவர் வந்திருந்தார். அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள், மூங்கில் லத்திகளை தயார் செய்யும் தொழிலில் தேர்ச்சி பெற்றவர்கள். பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு தேவையான, லத்திகளையும், இந்த கிராம மக்கள் தான், தயார் செய்து கொடுத்தனர். சுதந்திர போராட்டத்தில் ஈடுபடும், இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, இந்த லத்திகளைத் தான், பிரிட்டிஷ் அதிகாரிகள் பயன்படுத்தினர்.இந்த தகவல் தெரிந்ததும், கிராம மக்களை அழைத்த, காந்தி, "இந்தியர்களை தாக்குவதற்கான லத்திகளை, தயாரித்து கொடுப்பதை நிறுத்தங்கள் என, அன்புடன் வேண்டுகோள் விடுத்தார்.காந்தியின் கோரிக்கையை, கோர்ட்காட் கிராம மக்கள் ஏற்றுக் கொண்டனர். தங்களின் அன்பு பரிசாக, ஒரு மூங்கில் லத்தியை, காந்திக்கு அளித்தனர். இந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், குறிப்பிட்ட நாளில், "லத்தி மகோத்சவம்என்ற பெயரில், மிகப் பெரிய விழாவாக, கிராம மக்கள் கொண்டாடுகின்றனர். இந்தாண்டுக்கான விழா, நேற்று துவங்கியது. மூன்று நாட்களுக்கு, இந்த விழா நடக்கும். காந்திக்கு, லத்தியை பரிசளித்தவர்களில், போதன் பஸ்வான், 103 என்பவர், இன்னும், இந்த கிராமத்தில் வசிக்கிறார். இந்தாண்டு விழாவில், அவரும் பங்கேற்கிறார்.

No comments:

Post a Comment