Thursday, November 15, 2012
பொறுமை
தினசரி தியானம்
பொறுமை
பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் பண்படுத்தும் பெரிய பொருளே, உன்போன்று நான் பொறுமை படைத்திருப்பேனாக.
அமைதி ஆற்றலுக்கு அறிகுறி, பயிற்சியில் பண்பாடு அடைந்து பொறுமையுடன் இருக்கும் மனதில் ஆற்றல் மிக உண்டு. எப்படி வினையாற்றுவது என்பது பொறுமையாளனுக்குத் தெரியும். அவன் வீண் பேச்சுப் பேசான். அவனுடைய வேலைத்திட்டம் யந்திரம் போன்று ஒழுங்கானது, முன்யோசனை அவனுக்கு மிகவுண்டு. நாடிய கருமத்தை முறையாக அவன் செய்துமுடிப்பான். இதுவே பொறுமையின் விளைவு.
உள்ளும் புறம்பும் ஒரு படித்தாய் நின்று சுதங்
கொள்ளும் படிக்கிறை நீ கூட்டிடவுங் காண்பேனோ?
-தாயுமானவர்
Labels:
தினசரி தியானம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment